தஞ்சாவூர், ஆக.22- பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் கிடக்கும் தென்னை மரக்கழிவுகள் மற்றும் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர், தூம்புகளில் அடைபட்டு இருக்கும் மண்ணை அகற்றி, தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி சரிசெய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில், கடைக் கோடி பகுதியான பேராவூரணி தாலு காவில் நகரில் நடுவில் அமைந்தி ருக்கும், ஆனந்தவல்லி வாய்க்கால் நிலைமை படுமோசமாக உள்ளது. மேட்டூரில் அணை நிரம்பி கல்ல ணைக்கு காவிரி நீரானது வந்த டைந்து, கல்லணையை திறக்கும் போது காவிரி நீர் கரைபுரண்டு வரு கின்ற நிலையில், கடைக்கோடி பகுதி யான பேராவூரணி மற்றும் சுற்றுவட்டா ரப் பகுதிகளை இன்னும் வந்தடைய வில்லை. கடைமடைப் பகுதிகளுக்கு தண் ணீர் வந்தால் தான், கடந்த சில ஆண்டு களாக நடைபெறாமல் உள்ள, விவ சாயப் பணிகளை மேற்கொள்ளலாம். அதற்கு இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர் பார்த்திருக்கும் நிலையில் ஆனந்த வல்லி வாய்க்கால் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகளின் மெத்த னமே இதற்கு காரணமாக உள்ளது. ஆவணத்தில் இருந்து கிளை வாய்க்கால் மூலம் ஆனந்தவல்லி வாய்க்காலுக்கு தண்ணீர் வரும். இந்த ஆனந்தவல்லி வாய்க்கால், பழைய நகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், கொரட்டூர் ஆகிய பகுதி களில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடி யது. இந்நிலையில், ஆனந்தவல்லி வாய்க்காலில் தடையின்றி தண்ணீர் வரவேண்டியது அவசியமாகும். இந்நிலையில், மாவடுகுறிச்சி முதல் கழனிவாசல் வரை இந்த வாய்க் காலில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் விழுந்த தென்னை மரங்கள் மற்றும் அதன் கழிவுகள் கொட்டப் பட்டுள்ளது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆனந்தவல்லி வாய்க்காலில் தேங்கி உள்ளது. மேலும் பேராவூரணி பழைய பேருந்து நிலை யம் பின்புறம் அமைந்துள்ள ரயில்வே லைன் கிழக்குத் தெரு செல்லும் சாலைக்கு குறுக்கே ஒரு பாலம் அமைந் துள்ளது. அந்த பாலத்தின் தூம்புகள் அடைத்து மண்மேடாக காணப்படு கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப்பையா கூறுகை யில், “பொதுப்பணித்துறை அதிகாரி கள் உடனடியாக இந்தத் தூம்பில் உள்ள மண்ணையும், ஆனந்தவல்லி வாய்க்காலில் கிடக்கும் தென்னை மரக் கழிவுகளை அப்புறப்படுத்துவதோடு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்காலில் வெளியேற்ற விடாமல் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளை வாய்க்கால்களில் மணக்காடு உள்ளிட்ட பல இடங்களில் புயலால் சாய்ந்த மரங்கள் கொட்டப் பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும். விவசாயிகள் எதிர்பார்த்துள்ள காவிரி நீர் இரண்டு மூன்று நாட்களில் கடைக்கோடி பகுதி யான பேராவூரணியை எட்டும் என்கிற நிலையில் அதற்குள்ளாக தூர்வாரும் பணியை நிறைவு செய்ய வேண்டும்” என்றார்.