கும்பகோணம், மார்ச் 18- வங்கிகள் விவசாயிகளு க்கு வழங்கி வந்த மானியத்து டன் கூடிய வேளாண்மை விவ சாய நகை கடன் வட்டியை மார்ச்சுக்குள் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண் டும் என்ற வங்கிகளின் அறி விப்பால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வங்கிகளின் விவசாயிக ளுக்காக 7 சதவீத வட்டியில் நகைக் கடன் வழங்கப்பட்டு வந்தது. இதில் காலக்கெடு விற்குள் முறையாக திரும்பச் செலுத்தும் விவசாயிகளு க்கு 3 சதவீத வட்டி தொகை மானியமாக வழங்கப் பட்டு வந்தது. இத்திட்டத்தின்கீழ் ஒரு லட்ச ரூபாய் வரை ஆவணங் கள் இன்றியும் பட்டா சிட்டா போன்ற ஆவணங்கள் இருந்தால் மூன்று லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கும் நடைமுறை இருந் தது. ஆனால் இத்திட்டத்தை நிறுத்துவதற்கான முதற் கட்ட நடவடிக்கையாக வங்கி களில் நகை கடன் வழங்கு வது கடந்த 2019 அக்டோபர் முதல் குறைக்கப்பட்டது. கடந்த 2019 அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன் மானியத்துடன் வழங்கப் பட்ட நகை கடன் வழங்கப் பட்ட தேதியிலிருந்து வட்டி சலுகையுடன் மீட்பதற்கு உண்டான காலக்கெடு இருப் பினும் ரிசர்வ் வங்கியின் திடீர் அறிவிப்பால் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் மானியத்துடன் கூடிய விவசாய நகை கடனுக்கு வட்டியை செலுத்தி புதுப்பி த்துக் கொள்ள வேண்டும் என்று வங்கிகள் அறிவித் துள்ளன. தவறும் பட்சத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 9% மாற்றப்படும் என அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பு விவ சாயிகளுக்கு பேரிடியாக உள்ளது. நகைக்கடை மீட்ப தற்கு உண்டான காலக்கெடு முடிவதற்கு அவகாசம் உள்ள நிலையில் மாதத் திற்குள் வட்டி செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வற்புறுத்துவது குறித்து விவ சாயிகள் அதிருப்தி தெரி வித்து வருகின்றனர். ஆனா லும் வங்கி தரப்பில் ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி செயல் படுவதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய செய்து நகை கடன் பெற்றுள்ள விவ சாயிகள் மீட்பதற்கு உண் டான காலக்கெடு உள்ள வரை மானியத்துடன் கூடிய வட்டிவீதம் நீடிக்கவேண்டும். தற்போது விவசாய நகை தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது ரத்து செய்து அரசு உத்தரவிட வேண்டும். மீண்டும் விவ சாயிகளுக்கான மானி யத்தை தொடர வேண்டும் என விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வலியுறுத்தி யுள்ளார்.