தஞ்சாவூர், ஜூலை 11 - பேராவூரணி அருகே குருவிக்க ரம்பை பரம்பாடி ஏரியில் நீதிமன்ற உத்த ரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நி லையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வலைத்தளங்களில் அவதூறு பரப்பி யவர் மீது காவல்துறை நடவடிக்கை எடு த்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை வரு வாய் கிராமம் பரம்பாடி ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக பெரிய கள்ளங்காடு ந.ராஜ மாணிக்கம் என்பவர் தொடர்ந்து வழ க்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு களை அகற்றுமாறு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உத்தரவிட்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி புல எண்.77ல் 31.54.5 ஹெக்டேர் பரப்பளவு (சுமார் 78 ஏக்கர்) ஆகும். கொன்றைக்காடு, கள்ளங்காடு மற்றும் நாடாகாடு கிராமங்களைச் சேர்ந்த 42 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, 4 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகு படியும், 2 ஹெக்டேர் பரப்பளவில் எள் மற்றும் உளுந்து சாகுபடியும், 6 ஹெ க்டேர் பரப்பளவில் நெல் சாகுபடியும் செய்திருந்தனர்.
இந்த ஏரியில் நீர் தேக்கி வைப்பதன் மூலம் அதனைச் சுற்றியுள்ள 6 கிராமங்களைச் சேர்ந்த ஏரி கள் மூலம் பாசன ஆதாரம் ஏற்பட்டு 1000 ஏக்கருக்கு மேல் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், கடந்த சில ஆண்டு களாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தற்கு வருவாய்த்துறை மூலம் தொட ர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. ஆக்கிரமிப்பா ளர்களின் எதிர்ப்பு காரணமாக ஆக்கி ரமிப்பு அகற்றும் பணி காலதாமதமானது. இந்நிலையில் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், கடந்த ஜூன் 21 முதல் ஏரியில் ஆக்கி ரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதையடுத்து, ஏரி யில் எல்லைகளை அடையாளம் கண்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் கரைகள் உய ர்த்தப்பட்டு, ஏரியின் உள்ளே உள்ள வயலில் வரப்புகள் சமப்படுத்துகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி சுமார் 576 காய்ப்பு தென்னை மரங்கள், 25 இளங்கன்றுகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.
மேலும் குள த்தை தூர்வாரி, மராமத்து செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருவாய்த்துறை நட வடிக்கைகளுக்கு, களங்கம் கற்பி க்கும் வகையில், சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியதாக செரு பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ்ச்செ ல்வன் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேராவூரணி வட்டா ட்சியர் க.ஜெயலட்சுமி கூறுகையில், “கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆக்கி ரமிப்பை அகற்ற முயற்சி எடுக்கப்ப ட்டும் நடைபெறாமல் இருந்த நிலை யில், தற்போது ஆக்கிரமிப்பை அகற்று வதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நி லையில் இதுகுறித்து சில சமூக விரோதி கள் தவறான தகவல்களை தொடர்ந்து வலைதளங்களில் பரப்பி வருகின்ற னர். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்ப டையில் மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.