தஞ்சாவூர், ஜூலை 25 - தஞ்சாவூர் ஒன்றியம் திட்டை கிராமத்தில் பல்வேறு இயக்கங்களிலிருந்து 20 குடும்பங்களைச் சேர்ந்த தோழர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சனிக்கி ழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கர்ணன் தலைமை வகித்தார். கட்சி யின் கொடியை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், வி.தொ.ச கொடியை சங்கத்தின் மாவட்டப் பொ ருளாளர் கே.அபிமன்னன் ஏற்றி வைத்து பேசினர். கட்சி யின் ஒன்றிய செயலாளர் எம்.மாலதி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கே.பன்னீர்செல்வம், பி. சங்கிலிமுத்து, ஏ.கருப்பு சாமி, து.கோவிந்தராஜூ ஆகி யோர் கலந்து கொண்டனர்.