tamilnadu

img

சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், டிச.3-  மேட்டுப்பாளையம் அருகே நடுவூர் ஆதிதிராவிடர் குடியிருக்கும் பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் எழுப்பியிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள்.  இதனை கண்டித்து கும்ப கோணத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தி ற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தார்.  விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, மண்டலத் தலைவர் சா. விவேகானந்தன், நீலப்புலிகள் இயக்கம் மாநில தலைவர் இளங்கோவன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி, நகர செய லாளர் செந்தில்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தை. செல்வமணி, கோவி. பகத்சிங், விசிக நிர்வாகிகள் அரசாங்கம், முல்லை வளவன், அண்ணாதுரை, வெண் மணி, பாலகுரு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் குடந்தை ஜாபர் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்தில், தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். விபத்துக்கு காரணமான நில உரிமை யாளரை எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அர சாங்க வேலை வழங்க வேண்டும். சம்பவத்தன்று ஆர்ப்பாட்டம் செய்த தால் கைது செய்யப்பட்ட 27 பேரை வழக்கு இன்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத் தப்பட்டன.