கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த 34வது இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று முடிவடைந்தன.
நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பிய நாட்டு வீரர் நோவாக் ஜோகோவிச்சும் மற்றும் இத்தாலி ஓபன் பட்டத்தை பெற்ற நடப்பு சாம்பியன் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடாலும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் ரபேல் நடால் 6-0, 6-4 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் கடந்த ஆண்டு இத்தாலி ஓபன் பட்டத்தை வென்ற ரபேல் நடால் இந்தாண்டும் 9வது முறையாக தட்டிச் சென்றுள்ளார்.
மேலும், உலக தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கரோலினா பிலிஸ்கோவாவும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோஹன்னா கோண்டாவும் மகளிர் ஒற்றையர் பிரிவு பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் மோதினர். இப்போட்டியில் கரோலினா பிலிஸ்கோவா விட்டுக்கொடுக்காமல் 6-3 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.