tamilnadu

img

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- ரயில்வேத் துறையை தனியார் மயமாக்கும் மத்திய மோடி அர சைக் கண்டித்து சிஐடியு, டிஆர்இயு  மற்றும் வாலிபர் சங்கம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி: வாலிபர் சங்க மாவட்ட குழு, லால்குடி ஒன்றிய குழு சார்பில் லால்குடி ரயில் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் திலக்பிரபு தலைமையில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் அருகில் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் தலைமை வகித்தார். 

தஞ்சாவூர்: தஞ்சை ரயிலடியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். டிஆர்இயு துணைப் பொதுச் செயலாளர் எஸ்.மனோகர், சிஐடியு மாவட்ட தலைவர் து.கோவிந்தராஜூ, சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் க.அருளரசன் தலைமை வகித்தார்.

மன்னார்குடி: மன்னார்குடி தலைமை அஞ்சலகம் எதிரில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகுபதி தலைமை வகித்தார். அரியலூர்: அரியலூர் ரயில் நிலையம் முன்பு சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை பொது செயலாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி: புதுக்கோ ட்டை ரயில் நிலையம் முன்பு சிஐ டியு மாவட்டத் தலைவர் கே.முகம தலிஜின்னா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை ஜங்சன்  முன்பு டிஆர்இயு - சிஐடியு சார்பில்  மயிலாடுதுறை கோட்ட தலைவர் வேந்தன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவீந்திரன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் டி.துரை க்கண்ணு, மாற்றுதிறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.