ஆன்லைன் கல்வி முறையை கைவிட வேண்டும், தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தனர் குடியாத்தம் தட்டப்பாறை, பொன்னாங்கட்டியூர், மூங்கப்பட்டு, வெள்ளேரி உள்ளிட்ட 11 மையங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் பெ.திலீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.