தென்காசி, ஜூன் 15- தென்காசி மாவட்டத்தில் திங்கட்கிழமை ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்றால் பாதி க்கப்பட்டோர் எண்ணிக்கை 134 ஆகவும், குணமானோர் எண்ணிக்கை 90 ஆகவும் உயர்ந்துள்ளது. 44 பேர் மருத்துவமனையில் சிகி ச்சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட்ட த்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 107 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2069 பேர், சென்னை நீங்கலாக வெளி மாவட்டங்க ளில் இருந்து வந்த 2123 பேர், சென்னையில் இருந்து வந்த 2526 பேர் என மொத்தம் 6825 பேர் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 6460 பேர் வீடு களில் தனிமை ப்படுத்தப்ப ட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையங் களில் 365 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை 10, 317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்ப ட்டுள்ளது.
திங்கட்கிழமை மட்டும் 560 பேருக்கு கொ ரோனா பரிசோதனை செய்ய ப்பட்டுள்ளது. இவர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். தென்காசி மாவட்டத் தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூரண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட் டோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. 44 பேர் மட்டும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோர் வசித்த பகுதிகள் தனி மைப்படுத்தப்பட்டு சுகாதா ரப் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. இப்பகுதிகளை வரு வாய்த்துறையினர், சுகாதா ரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர மாக கண்காணித்து வரு கின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண் டாம். அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிற பகு திகளில் இருந்தும் இப்பகுதி களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.