100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் சம்பளம் ரூ.600 வழங்க வேண்டும். கொரோனா நிவாரணம் குடும்பத்துக்கு ரூ.7500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி கணபதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குத்தாலிங்கம்,பேச்சிமுத்து,கேனசன் ,செல்லத்துரை, மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.