ஐதராபாத்தை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், மென்பொருள் நிறுவனத்தில் தகவல் விஞ்ஞானி பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சித்தார்த் ஸ்ரீவாஸ்தவ் பில்லி என்ற மாணவன், ஸ்ரீ சைதன்யா பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தில் தகவல் விஞ்ஞானி பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சித்தார்த் கூறுகையில், ”எனக்கு 12 வயது ஆகிறது. மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தில் தகவல் விஞ்ஞானியாக பணிபுரிகிறேன். ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் படிக்கிறேன். செயற்கை நுண்ணறிவியல் மீது இருந்த ஆர்வம் தான், இந்த பணியில் தேர்வாக எனக்கு உதவியதாக இருந்தது. சிறு வயதிலேயே வேலை பெற எனக்கு நிறைய உதவிகளை என் தந்தை செய்தார். எனக்கு கோடிங் குறித்து பல பாடங்களை கற்றுக் கொடுத்தார். என் சாதனைக்கு, என் தந்தை தான் காரணம்” என்று கூறினார்.