tamilnadu

img

ஓய்வூதியம் தொகை இரட்டிப்பு

ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலஅமைச்சரவைக் கூட்டம்,அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில்,சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையிலான ஓய்வூதியம் ஆயிரம்ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 106 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500லிருந்து 3 ஆயிரத்து 16 ரூபாயாகஅதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.