சென்னை, ஜூலை 6- மக்களவை தேர்தலில், திமுக சார்பில் கதிர் ஆனந்த், போட்டியிடு வார் என மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுரு கனின் மகன் கதிர் ஆனந்த் தான் ஏற்கனவே வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுவ தாக இருந்தது. தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் நடைபெற உள்ள நிலையில் கதிர் ஆனந்தையே திமுக மீண்டும் வேட்பாளராக்கியுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத் தில், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே செய்துகொண்ட உடன்பாட்டின்படி ஏ.சி.சண்முகத் திற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.