tamilnadu

img

அனைத்து டாஸ்மாக் கடைகளில் கிரில் கேட் அமைக்க வேண்டும்

சென்னை,ஆக. 17- அனைத்து  டாஸ்மாக்  கடைகளிலும் கிரில் கேட் அமைக்கப்படவேண்டும் என்று  நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அனுப்பிய சுற்ற றிக்கை வருமாறு: மதுக்கடை மேற்பார்வையாளர்கள், கூடுதல் மேற்பார்வையாளர்கள், மதியம்  12 மணிக்கு கடைகளை திறக்கும் போதும், இரவு 10 மணிக்கு மூடும் போதும்  கண்டிப்பாக கடைகளில் இருக்க  வேண்டும். கடை சாவி மேற்பார்வையாளர் கள் வசம் இருக்க வேண்டும்.ஒவ்வொரு கடையிலும் இரண்டு, மூன்று ஊழியர்கள் இருக்க வேண்டும். அதிகம் விற்பனையாகும் மாலை 5  மணி முதல் இரவு 10 மணி வரை மேற்  பார்வையாளர் மற்றும் கூடுதல் மேற் பார்வையாளர்கள் அவசியம் பணியில் இருக்க வேண்டும். இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வசூல் பணத்தை இரும்பு பாதுகாப்பு பெட்டியில் வைக்காமல் மேஜையில் வைப்பது, அட்டை பெட்டியில் வைப்பது,  வீட்டிற்கு எடுத்து செல்வது போன்ற செயல்  களில் ஈடுபடக் கூடாது.வெளிநபர்கள் அத்து மீறி கடைக்குள் நுழைவதை தடுக்கவும்,  ஊழியர்கள், மது வகைகள், பணத்தை  பாதுகாக்கவும் அனைத்து மதுக்கடைகளி லும் ‘கிரில்’ கேட் அமைக்க வேண்டும். அந்த  கேட் எப்போதும் கடையின் உட்புறமாக பூட்டப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருக்  கும் பட்சத்தில் மட்டுமே கடைகளுக்குள் யாரும் நுழையாதபடி பாதுகாக்க முடியும். இந்த அறிவுரைகளை மாவட்ட மேலா ளர்கள் கடை ஊழியர்களுக்கு எடுத்து ரைத்து தவறாது பின்பற்றுமாறும், அவற்றை உடனடியாக அமல்படுத்து மாறும் கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.