tamilnadu

img

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6-ல் கூடுகிறது

சென்னை,டிச.24- தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர்  ஜனவரி 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம்  தேதி தொடங்கி நடைபெற்றது. சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு ஜூன்  மாதம் 28 ஆம் தேதி மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக  கடந்த மாதம்  ஜூன் 28 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியது.  ஜூலை மாதம் 20 ஆம் தேதி வரை அந்த  கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன்பிறகு, குளிர் காலக் கூட்டத் தொடர் கூடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டுவது மர பாக உள்ளது. அந்த வகையில் வருகிற 6 ஆம்  தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இது தொடர்பாக தமிழக சட்டச்பேரவை  செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 174 (1)-ன் கீழ் தமிழ் நாடு சட்டமன்றப் பேவையின் கூட்டத்தை தமிழ்நாடு ஆளுநர், கூட்ட உள்ளதாக கூறி யுள்ளார்.

வருகிற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெற உள்ள தாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜன வரி 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரை  நிகழ்த்த உள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் 5 நாட்களுக்கு அதாவது திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்  மீது விவாதம் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலை வர்களை மறைமுகமாக தேர்ந்தெடுப்பதற் காக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. மேலும் ஆளுநர் நிகழ்த்த உள்ள உரையில், புதிய அறி விப்புகள் மற்றும் திட்டங்கள் இடம் பெறக்  கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.