tamilnadu

img

முன்கூட்டியே விடுதலை நளினி மனுவை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை, ஆக.13-  ஆயுள் கைதியாக உள்ள  நளினி முன்கூட்டியே விடுதலை செய்ய  வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது என்று தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக  உள்ள நளினி தம்மை முன் கூட்டியே விடுதலை செய்யு மாறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு வழங்கிய பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள் ளது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க  சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதாகும். இதைத் தொடர்ந்து தண்டனையை குறைக்கும் மாநில அரசின் அதி காரத்தை நீதிமன்றங்கள் செயல் படுத்த முடியாது என்றும்  முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு நளினி மனு மீதான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.