தஞ்சாவூர் நவ.23– தஞ்சையில், கணவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெண் காவலர் எஸ்.பி., அலுவலகத்தில் இரண்டு மகன்களுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வண்டிக்காரத்தெரு, கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி நிரோஜா (வயது 27), ஊர்க்காவல் படையில் காவல ராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கர் பெயி ண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கணவரை வெளி நாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் முடி வில் நிரோஜா இருந்துள்ளார். இதை யடுத்து அதே பகுதியை சேர்ந்த ராஜேந் திரன், அவரது மனைவி கல்பனா, அவர் களது மகன் அருண் ஆகியோர் சங்கரை சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்திற்கு 70 ஆயி ரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி, 3.30 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். சில நாளில் விசாவும் எடுத்து சங்கரிடம் கொடுத் துள்ளனர். அதனைக் கொண்டு சிங்கப் பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற சங்கருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது போலி விசா என்பது தெரியவந்தது.
இதையடுத்து சங்கர், நிரோஜா இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, ராஜேந்திரனிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் பண த்தை திரும்பி தராமல் ஏமாற்றி வந்துள் ளார். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 10ல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரனிடம் நிரோஜா புகார் அளித்துள்ளார். அவரும் இது குறித்து, தஞ்சை தாலுகா காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தாலுகா காவல்துறையினர், ராஜேந்திரனை அழைத்து விசாரணை நடத்தி விட்டு, அவர் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காமல் அனுப்பி விட்ட னர். அவரிடமிருந்து பணமும் வாங்கித் தரப்படவில்லையாம். இதையடுத்து நிரோஜா தனது 2 மகன்களுடன் வெள்ளிக்கிழமை மதி யம், எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து உடலில் ஊற்றியுள்ளார். அதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை எஸ்.பி., மகேஸ்வரனிடம் அழைத்துச் சென்றனர். பெண் காவ லர் எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.