tamilnadu

img

அக்.28 விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,அக்.22- தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு விடு முறை அறிவித்து தமிழக அரசு ஆணை யிட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டி கைக்கு தங்களது சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக வரும் 28 ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரி சீலித்து தீபாவளிக்கு அடுத்த நாள் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதி இரண்டாம்  சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை தினமானது செலா வணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள  கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட  பணியாளர்களோடு செயல்பட அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.