tamilnadu

img

ரூ. 2 ஆயிரம் கோடிக்கு பிணைய பத்திரங்கள் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, மே 9- பங்குகள் வடிவிலான பிணையப் பத்தி ரங்களை ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்பில் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய விரும்புவதாக தமிழ்நாடு அரசு அறி வித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஐந்து ஆண்டு காலங்க ளுக்கு ரூபாய் ஆயிரம் கோடி, பத்து ஆண்டு  காலங்களுக்கு ரூபாய் ஆயிரம் கோடி ஆக  ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள  பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்  களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய விருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால்,  மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்  தில் மே 12 ஆம் தேதி நடத்தப்படும்.