சென்னை, மே 31-மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு தில்லி சென்று திரும்பிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவில் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கலந்து கொண்டேன்.திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை. இது பஜகவின் பிரிவும், பாரபட்சமான மனப்பான்மையைக் காட்டுகிறது. பா.ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நாங்கள் எல்லோரையும் சமமாக பாவிப்போம், எல்லாம் மாநிலத்தையும் பாரபட்சமின்றி நடத்து வோம், அனைத்து மாநிலங்கள் வளர்ச்சிக்கும் பாடுபடுவோம் என்று சொன்னார்கள். ஆனால், அந்த கூட்டணியில் இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இதற்கு காரணம், பாஜக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளை அரவணைத்துச் செல்வது தான் அரசியல் நாகரீகம். பாகிஸ்தான் பிரச்சனை, புல்வாமா தாக்குதலை முன்வைத்தும், மதத்தின் பெயராலும் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. காங்கிரஸ் எல்லா மதத்தையும் அரவணைத்து சென்றது.இவ்வாறு அவர் கூறினார்.