சென்னை, ஜூலை 20- தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை யன்று நடந்த மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் சரவணன், “சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனி சாமி,“ எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 3 கோடி உயர்த்தப்படும்” என்றார். முன்னதாக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசும் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படு கிறது. இந்த தொகையை ரூ.40 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மாதாந்திர மருத்துவப் படியை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் முன்னாள் உறுப்பினர்களும், சட்ட மேலவை உறுப்பினர்களும் கோரிக்கை வைத் துள்ளார்கள். அந்த கோரிக்கையை அரசு நிறை வேண்டும்” என்றார். இதற்கு அரசு தரப்பில் பதில் இல்லை.