சென்னை, ஆக. 28- டிஆர்இயூ-வின் துணை பொதுச் செயலா ளர் கே.சங்கரநாராயணனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த தோழர் கே. சங்கரநாராயணனின் உடலுக்கு சிஐடியு மாநில பொதுச் செய லாளர் எஸ். சுகுமாறன், வடசென்னை மாவட் டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மத்திய சங்கத் தலைவர் அபிமன்யூ, டிஆர்இயூ பொதுச் செயலாளர் மாத்யூ சிரியக், செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், துணைத் தலை வர்கள் ஆர்.இளங்கோவன், சாம்பசிவம், துணை பொதுச் செயலாளர்கள் பேபி சகிலா, வி.அரிலால், முருகேசன், நெடுமாறன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், பொருளாளர் வெங்கடேசன், ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பி.ராஜாராமன், செயல் தலை வர் கிருஷ்ணகுமார், மோகன், ருத்திரகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி பகுதி செயலாளர் ஆர்.ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், புதன்கிழமையன்று (ஆக. 28) காலை 11 மணிக்கு அவரது உடல் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு திருமுல்லை வாயலில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய் யப்பட்டது.