உதகை, ஜூன் 23- உதகையில் உள்ள தினசரி மார்கெட்டில் செவ்வாயன்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 20க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. நீலகிரி மாவட்டம், உதகை தினசரி மார்கெட்டில் 1000த்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், செவ்வாயன்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டுக்கும் மேற் பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஐந்து தண்ணீர் லாரிகளும் வர வழைக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரி களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் 20க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனை கண்ட கடை உரிமையாளர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.