பெரம்பலூர்,ஜன.3- பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மறு வாக்கு என்ணிக்கை கோரி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டி யிட்ட திமுக வேட்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடு பட்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அல்லி நகரம் ஊராட்சித் தலைவர் பத விக்கு மேல உசேன் கிரா மத்தைச் சேர்ந்த அதிமுக வின் மருதமுத்து (45), தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவின் பழனிவேல் (36) ஆகியோர் போட்டியிட்டனர். இதில், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அல்லிநக ரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மருத முத்து வெற்றி பெற்றதாக அறி விக்கப்பட்டது. இதையறிந்த, பழனி வேல் மற்றும் அவரது ஆதர வாளர்கள், வாக்கு எண்ணி க்கையில் அதிகாரிகள் உள்நோக்கத்தோடு குளறுபடி செய்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும், பெரம்பலூர் - அரியலூர் சாலையில், குன்னம் அருகேயுள்ள அல்லிநகரம் பகுதியில் மறி யலில் ஈடுபட்டனர்.முன்ன தாக, பழனிவேல் மண்ணெ ண்ணெய் ஊற்றி தற்கொலை க்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த குன்னம் போலீசார், அவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி யதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.