tamilnadu

img

நோய்த்தொற்று பயத்தால் வீட்டிலேயே முடங்கி பட்டினி கிடக்கும் தினக்கூலிகள்

அரசு உதவிக்காக காத்திருக்கும் பரிதாபம்

சென்னை, ஏப்.1- சென்னை திருவிக நகர் நம்மாழ்வார் பேட்டையில் கொரானா பீதியால் வீட்டில்  முடங்கி பசியால்  கூலித்தொழி லாளர்கள் வாடி வருகின்றனர். சென்னை ஓட்டேரி அருகில் உள்ள நம்மாழ்வார்பேட்டையில் உள்ள சுப்பராயன் 5வது தெரு வில் தனிநபருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் 47 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 200க்கும் மேற்பட்டவர்கள்  கடந்த 8 நாட்க ளாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். தமிழ்நாடு அர சின் உத்தரவையும் மதித்தும் காவல்துறையினரின் கெடு பிடிக்கு மத்தியில் வெளியில் செல்லமுடியாமல் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள், அப்பளத்தொழி லாளர்கள் , ஆட்டோ ஓட்டுநர், வீட்டு வேலை, சாலையோர சிறுகடை வைத்திருப்பவர்கள், உடல் உழைப்பு முறைசாரா தொழிலா ளர்களாக பணிசெய்து வருகின்ற னர். இவர்களுக்கு தமிழ்நாடு  அரசு  ரேஷன் கார்டு வைத்தி ருக்கும் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை, ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படுவது, கட்டடத் தொழிலாளர்கள், ஓட்டு நர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ  தொழிலாளர்களுக்குச் சிறப்புத்  தொகுப்பாக 1000 ரூபாய், 15 கிலோ  அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணை ஆகியவற்றை வழங்குவதாக அறிவிப்பப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட நடை பாதை வியாபாரிகளுக்கு ரேஷன்  கார்டிற்கு வழங்கப்படும் ஆயிரம்  ரூபாயோடு சேர்த்து கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக பட்டியலிப்பட்டது. ஆனால் இவை யாவும் சென்னை மாநகரில் வசிக்கும் மக்களுக்கு ஒருவா ரத்திற்கு மட்டுமே பயன்படும். மேலும் ரேசன் கார்டு இல்லாத பல குடும்பங்கள் உள்ளன அவர்களுக்கு அரசு என்ன செய்  யப்போகிறது என்று தெரிய வில்லை. அப்பளத்தொழில் செய்யும் பெண் ஒருவர் கூறுகையில், அப்பளம் செய்யும் தொழிலை கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருகிறேன். கடந்த 10 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் தான்  வசித்து வருகிறோம். அரசின் 144 தடை உத்தரவுக்கு பின்னர்  எந்த வருமானமும் இன்றி தவிக்கி றோம்.. அன்னாடம் காய்ச்சியான நாங்கள் அரிசி கஞ்சி காய்ச்சி குடித்துக்கொண்டிருக்கிறோம்.. எங்கள் குடும்பத்தில் ஒரு மாற்றுத்  திறனாளியை வைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம். கடன் வாங்கி னால் கூட அதனை திருப்பித்தர முடியாத  பரிதாப நிலையில் தவிக்  கின்றோம். பத்துக்கு பத்து வீட்டில்  எங்களால் ரொம்பநேரம் இருக்க  முடியாது.

வெளியில வந்தா போலீசு அடிக்கிறாங்க. அவங்கள குத்தம் சொல்லமுடியாது. இப்பத்தான் கார்ப்பரேசன் காரங்க வந்து மருந்து அடிக்கிறாங்க.. இத முதலிலேயே செய்யலாமே  எங்களை இந்த அரசு எப்படி யாவது காப்பாற்ற வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டனர். குடியிருப்பின் உரிமையாளர் தேவநாயகி பேசுகையில், கடந்த 40 ஆண்டுகளாக இங்கு  வசித்து வருகிறோம். எங்க ளுக்கு இந்த வீடுமட்டுமே உள்ளது. வேலை கிடையாது. இதில் வரும் வாடகையில் தான்  வாழ்ந்துவருகின்றோம். பொது மக்கள் அனைவரும் வீட்டி லேயே இருப்பதால் இம்மாதம்  மின்சாரப்பயன்பாடு இரு மடங்காக இருக்கும் அதனால் மின்கட்டணம் கூடும் நிலை உள்ளது. அத்துகூலிகள் என்ப தால்  குறைந்த வாடகைக்கு தான்  வீடுகள் விடப்பட்டுள்ளன. இந்நி லையில் வாடகையை சில  வாரங்கள் கழித்து வாங்கிக் கொள்ளளாமே தவிர 3 மாதங்கள் கழித்து வாங்கமுடியாத நிலை யில் உள்ளோம். ஆகவே அரசு எங்களை போன்றவர்களின் நலனின் அக்கறை காட்டவேண் டும் என கேட்டுக்கொண்டார்.