tamilnadu

img

கொரோனா பாதிப்பை உடனடியாக சோதிக்க சீனாவிலிருந்து சாதனங்கள்

தமிழக அரசு முடிவு

சென்னை, ஏப்.6 கொரோனா நோயை உடனடி யாக சோதித்து முடிவுகளைத் தெரி விக்கும் ‘கிட்’களை சீனாவிலிருந்து தமிழ்நாடு அரசு வாங்கவிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா நோzயைக் கட்டுப் படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்  திங்க ளன்று ( ஏப்.6) காணொலி காட்சி மூல மாக  முதல்வர்  ஆய்வு நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய முதலமைச்சர், ஒரு லட்சம் கிட்கள் வரும் 9ஆம் தேதி தமிழகத்திற்கு வருமென்றார். இதன் மூலம் கொரோனா பரிசோதனை முடிவு கள் அரை மணி நேரத்தில் கிடைக்கும் என்றும் அரசு மருத்துவமனைகளுக் கென 2,500 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கான ஆணையும் பிறப் பிக்கப்படுவதாகவும் அவர்  தெரி வித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது 90,541 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்ப தாகவும் இதில் 10,814 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பிலிருந்து விடு விக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த முதலமைச்சர், கொரோனா இருக்கி றதா என்ற அறிகுறிகளுடன் 1848 பேர் மருத்துவமனையில் வைத்துக் கண் காணிக்கப்பட்டுவருவதாகத் தெரி வித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது 17 கொரோனோ ஆய்வகங்கள் உள்ள நிலையில் மேலும் 21 இடங்களில் ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வும் அதன் மூலம் மாநிலத்தில் உள்ள கொரோனா ஆய்வகங்களின் எண் ணிக்கை 38ஆக உயருமென்றும் தெரி வித்தார். மாநிலத்தில் தற்போது 4612 பேரு க்கு சோதனைகள் செய்யப்பட்டி ருக்கும் நிலையில், 571 பேருக்கு அந் நோய் இருப்பது உறுதிசெய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்நோயாளி களுக்கென 22,049 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மருத்துவர் களுக்குத் தேவையான உடல் பாது காப்பு உடைகள் , என் 95 முகக் கவசம், காய்ச்சல் மருந்துகள், ஆன்டி பயோ டிக் மருந்துகள், ஐவி திரவங்கள் போதுமான அளவில் இருப்பதாக வும் தெரிவித்தார். அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு நல வாரியங்களில் உறுப்பி னராக பதிவு செய்து உள்ளவர் களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண மாக வழங்கப்படும் என்று கூறிய முதல்வர், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பிய வர்கள் தாமாகவே முன்வந்து பரி சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

நோயின் தோற்று தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் மாநில அரசு எடுக்கும் அனைத்து நட வடிக்கைகளுக்கும் முழு ஒத்து ழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் சமூக இடைவெளி விட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண் டும் என்றும் அவர் கேட்டுக் கொண் டார். சென்னை மாநகரத்தில் நட மாடும் காய்கறி கடைகளை பிறப்ப தற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுப்ப தாகவும் அவர் கூறினார்.

 மாநில பேரிடர் நிதியிலிருந்து வேண்டும் மத்திய அரசு மீண்டும் 500 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி இருப்பதாகவும்  அரசின் நட வடிக்கைக்கு  மக்கள் முழு ஒத்து ழைப்பு கொடுத்தால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் கள் வீடு தேடி வரும் என்றும் முதல மைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.