சென்னை, ஆக. 6- தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திங்களன்று (ஆக. 5) பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.27 ஆயிரத்து 680 ஆக இருந்தது. செவ்வாயன்று (ஆக. 6) மேலும் ரூ.216 உயர்ந்துள்ளது. பவுன் ரூ.27 ஆயிரத்து 896 ஆக இருந்தது. கிராமுக்கு ரூ.27 அதிக ரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,487-க்கு விற்றது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ 45 ஆயிரத்து 700 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.45.70-க்கு விற்றது.