tamilnadu

img

கொரோனா நிவாரணமாக ரூ.20 ஆயிரம் கோடி

தேசத்திற்கு வழிகாட்டுகிறார் பினராயி விஜயன்

அனைவருக்கும் இலவச ரேசன் பொருட்கள் ரூ.2000 கோடிக்கு குடும்பஸ்ரீ கடன்கள்

திருவனந்தபுரம், மார்ச் 20- கோவிட் 19 பாதிப்பை வலுவாக எதிர் கொள்ளும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கான பொருளாதார நிவாரண தொகுப்புத் திட்டத்தை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்துள் ளது. அதன்படி அனைத்து குடும்பங்க ளுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்குவது, ஏப்ரல் மாதம் வழங்க வேண் டிய சமூக நலத்திட்ட ஓய்வூதியங்களை இந்த மாதமே வழங்குவது, ஓய்வூதியம் இல்லாதோருக்கு தலா ரூ.1000 வழங்கு வது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் பினராயி விஜயன் வியாழ னன்று மாலை வெளியிட்டார். வியாழனன்று மாலை நடந்த கோவிட்-19 ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கேரளத்தில் மேலும் ஒருவருக்கு கோவிட் 19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. காசர்கோட்டைச் சேர்ந்த இந்த நபருடன் கேரளத்தில் கோவிட் 19 பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேர ளத்தில் மொத்தம் 31,173 நபர்கள் கண் காணிப்பில் உள்ளனர். இதில் 237 பேர் மருத்துவமனைகளில் உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், ரூ.500 கோடி மதிப்பிலான சுகா தாரத்திட்ட தொகுப்பையும் முதல்வர் அறி வித்தார். ஏற்கனவே, ரூ.25 என அறிவிக் கப்பட்ட உணவை ரூ.20க்கு வழங்கவும், அதற்கான 1000 ஓட்டல்கள் உடனடியாக துவக்கப்படும். வறுமைக் கோடு வித்தியா சம் இல்லாமல் ஒரு மாதத்துக்கான ரேசன் இலவசமாக அனைவருக்கும் வழங்கப் படும் எனவும் முதல்வர் கூறினார். குடும்பஸ்ரீ மூலம் ரூ.2,000 ஆயிரம் கோடிக்கான கடன் வழங்கப்படும். அனைத்து நிலுவைகளும் ஏப்ரல் மாதம் வழங்கப்படும். பேருந்துகளுக்கான ஒரு மாத நிலையக் கட்டணம் தள்ளுபடி செய்யப் படும் என தெரிவித்த முதல்வர், ‘உடல் தூரம் மற்றும் சமூக ஒற்றுமை’ என்பது இந்த காலத்தின் முழக்கம் எனவும் குறிப் பிட்டார்.

நிவாரணத் திட்டங்கள்

  •  குடும்பஸ்ரீ மூலம் 2 மாதங்களுக்குள்  ரூ.2000 கோடிக்கான கடன்கள் வழங்கப் படும். பெருவெள்ளத்தின்போது குடும்பஸ்ரீ   வழங்கிய கடனைப்போன்றதாக இதுஇருக்கும். இது அனைத்து குடும்பங்களுக்கும்         கிடைக்கும்.
     
  •  ரூ.2000 கோடிக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைகள் ஏப்ரல் மாதங்களில், மாதம் ஒன்றுக்கு ரூ.1000 கோடி என்கிற அளவில் மேற்கொள் ளப்படும்.
  •  இரண்டு மாத சமூக பாதுகாப்பு ஓய்வூ  தியத்துக்காக சுமார் ரூ.1320 கோடி வழங்கப்படும்.
  •  சமூக பாதுகாப்பு நிதி பெறாத பிபிஎல், அந்தியோதயா குடும்பங்களுக்கு ரூ.1000 வீதம் வழங்கிட ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
  •  ரூ.20க்கு உணவு வழங்கும் ஆயிரம்  உணவகங்களுக்கு கூடுதலாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  •  தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அரசு வழங்க வேண்டிய நிலுவைகள் ரூ.14 ஆயிரம் கோடி ஏப்ரலில் வழங்கப்படும்.
  •  மருந்து உள்ளிட்ட சிறப்பு சிகிச் சைக்கான திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கான சுகாதார தொகுப்பு நிதி.
  •  மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம்.
  •  கூட்டுறவு கடன்களை திருப்பி செலுத்த ஓராண்டு கால அவகாசம்.
  •  ஆட்டோ, வாடகை கார்களுக்கான உரிமம் புதுப்பித்தல் கட்டணத்தில் சலுகை, பயணிகள் பேருந்துகளுக்கு மூன்று  மாத வரியில் ஒரு பகுதி தள்ளுபடி