சென்னை, ஆக. 19- ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22 ஆம் தேதி தில்லியிலுள்ள ஜந்தர்மந்தரில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சி எம்பிக்களும் கலந்து கொள்வார்கள் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு சிபிஎம், சிபிஐ, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத் தரவு பிறப்பிக்கப்பட்டு, தொலைத் தொடர்புகளை துண்டித்து அறி விக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர்கள், முன்னாள் முத லமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அடக்குமுறைகள், ஊரடங்கு உத் தரவின் மூலம் காஷ்மீரை பா.ஜ.க. தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து அவர்களின் அடிப் படை உரிமைகளை பறித்துள்ளது. வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ள தலைவர்களை விடு விக்கக் கோரி திமுக.சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் வரும் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஜன நாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.