இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு
திருவனந்தபுரம், அக்.18- கேரள சட்டமன்ற இடைத்தேர்தல்களு க்கான பிரச்சாரம் சனியன்று (அக்.19) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தேர்தல் களத்தில் இடதுசாரி கள் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் எதிர் கட்சிகள் திணறி வருகின்றன. கேரளத்தில் காலியாக உள்ள அரூர், வட்டியூர்காவு, கோந்நி, எர்ணாகுளம், மஞ்சேஸ்வரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதி களுக்கான தேர்தல் திங்களன்று (அக்.21) நடைபெற உள்ளது. சிபிஎம் தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநா யக கூட்டணி (என்டிஏ) களுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர்கூட என்டிஏவுக்கு இல்லை. சபரிமலையில் பெண்களை அனுமதிப் பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்வைத்தே இம்முறையும் பிரச்சாரம் மேற்கொண்டது. மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அவசர சட்டம் கொண்டுவந்து சபரிமலைக்கு சென்று இளம் பெண்கள் வழிபடுவதை தடுப்போம் என மக்களவைத் தேர்தலின்போது மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் உறுதியளித்தனர். மக்களுக்கு அளித்த இந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்ற வில்லை என்கிற கேள்விக்கு தேர்தல் களத்தில் பதிலளிக்க முடியாமல் பாஜக தலைவர்கள் திணறினர். இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடி குறித்து இடதுசாரிகள் முன்வைத்த கேள்விகள் துயரங்களை அனுபவிக்கும் மக்களின் கேள்வியாக மாறியுள்ளன. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்று வரும் நிலையில் கேரள அரசு புதிய பொதுத் துறை நிறுவனங்களை தோற்றுவித்தும், நட்டத்தில் இயங்கிய பொதுத்துறை நிறு வனங்களை லாபகரமாக மாற்றியுள்ள தும் பாஜகவினருக்கு பதிலளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.
யுடிஎப் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் எதிர்க்கட்சியாக உள்ள யுடிஎப்புக்கு தலைவலியாக மாறியுள்ளன. பாலாரிவட்டம் மேம்பாலம் ஊழலில் முன்னாள் அமைச்சர் வி.கே.இப்ராகிம் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார். தற்போது எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மீது அவரது மகனுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் தகுதி நிலையை உயர்த்த மேற்கொண்ட முயற்சி அம்பல மாகி தேர்தல் களத்திலும் பிரச்சாரமானது. இவற்றை எதிர்கொள்ள முடியாத யுடிஎப் சாதி பாகுபாடுக்கு வழிவகுக்கும் என்எஸ்எஸ் நிலைப்பாட்டை தனது தேர்தல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி வருகிறது. அதற்கு எதிரான புகார் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட்ட தொகை குறித்து முதல்வர் பின ராயி விஜயன் அளித்த விளக்கம் வாக்கா ளர்கள் மத்தியில் விவாதமாகி உள்ளது. சபரிமலையின் வளர்ச்சிக்காக மூன்று ஆண்டுகளில் ரூ.1273 கோடி செலவிட்ட தாக முதல்வர் பினராயி விஜயன் கூறி னார். இதை மறுத்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி யுடிஎப் ஆட்சி காலத்தில் சாலைகளுக்காக ரூ.640 கோடி, சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு ரூ.150 கோடி செலவிட்டதாக கூறினார். எல்டிஎப் அரசு ரூ.47.5 கோடி மட்டுமே செல விட்டுள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை யைக்கூட கொடுக்கவில்லை எனவும் உம்மன் சாண்டி பொய்யான குற்றச்சாட்டு களை கூறினார். இதற்கு வியாழனன்று விரிவாக பதிலளித்த முதல்வர், யுடிஎப் அரசு 5 ஆண்டுகளில் செலவழித்தது ரூ.212 கோடிதான் என்பதை உறுதிபட தெரி வித்தார். இதற்கு பதிலளிக்க முடியாமல் யுடிஎப்பும், அவர்களுடன் ஒத்து ஊதிய பாஜகவும் வாயடைத்துள்ளன.