புதுதில்லி, ஜுன் 17- 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்களன்று துவங்கிய நிலையில், மக்களவை உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர். பதவியேற்பு செவ்வாயன்றும் தொடர்கிறது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி யமைத்தது. இதனைத் தொடர்ந்து 17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்க ளன்று (ஜூன் 17) துவங்கியது. முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடை பெற்ற நிகழ்வில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதனைத் தொடர்ந்து, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதலாவதாக வாரணாசி தொகுதி எம்.பியாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த எம்.பி சுரேஷ் கொடிக்குனில், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்காரி, ஸ்மிருதி இரானி, ஹர்ஷவர்தன், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் உள்ளிட்டோர் பதவி யேற்றனர். தொடர்ந்து எம்.பி.க்கள் பதவி யேற்று வருகிறார்கள். செவ்வாயன்றும் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கு வதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, “இன்று, நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்குகிறது. புதிய எண்ணங்களு டனும் கனவுகளுடனும் இந்த அமர்வை தொடங்கவுள்ளோம். இந்த மக்களவைத் தேர்தல் அதிகப்படியான பெண் மக்க ளவை உறுப்பினர்களை கொடுத்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசானது இரண்டாவது முறையாக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மக்கள் நலனுக்கான முடிவுகளை எடுக்க மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்” என்று வேண்டு கோள் விடுத்தார். மேலும், “எதிர்க்கட்சிகளின் பணி என்பது மிகவும் முக்கியமானது. இதனை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளையும், கருத்துக்களையும் நாங்கள் வரவேற்கிறோம். எதிர்க்கட்சி களுக்கு எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. இந்தக் கூட்டத் தொடரில் அவர்கள் முனைப்புடன் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.