நாடாளுமன்ற தேர்தல் வரும் எப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், தேர்தல் நாளில் மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் நடைபெறும் காரணத்தால் தேர்தல் தேதியை மாற்றி வேண்டும் என்றும், தேர்தல் நாளில் பெரிய வியாழன் பண்டிகை என்பதால் கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என்று 3 மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையில், சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது. ஆனால், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திருப்பதாக கூறியது. மேலும், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளையும் மாற்ற முடியாது மற்றும் பிரார்த்தனைக்கு கிறிஸ்தவர்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வர போதிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, தேர்தலுக்கு எதிரான 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.