கொச்சி
தமிழ், மலையாள திரைப்பட பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். தனது துடிப்பான நடிப்பால் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர். வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் மட்டுமே நடித்தாலும், நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக கொண்டு வருபவர். இதனால் நித்யா மேனன் படம் என்றால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கம் செல்வார்கள். இதனால் காரணம் அவரது கதை தேர்வு தான்.
தற்போது தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான "தி அயன்லேடி" படத்தில் நடித்து வரும் நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு நித்யா மேனன் அளித்த பேட்டி அளித்துள்ளார். அதில் ,"சினிமா துறையில் மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. சிலர் என்னிடம் ஆபாசமாகப் பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். பெண்களே என்ன நடந்தாலும் அதை எதிர்ப்பதில் பங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவைக் கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தால் மட்டுமே பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்" என நித்யா மேனன் பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். கூறியுள்ளார்.