திருவனந்தபுரம், பிப்.26 - தேசத்தின் தலைநகரம் வகுப்புவாத பிரிவினைக ளும் மனித வேட்டையும் நடக்கும் இடமாக மாறியுள்ளது என்பதைக் கேட்டு அதிர்ச்சியாக இருக்கிறது. வன்முறை யைத் தடுக்கவும், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லியில் வாழும் சாதாரண மக்கள் பீதியடைந் துள்ளனர். உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பில்லை என பல மலையாளிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது நாட்டின் தலைநகரில் நிலவும் பாதுகாப்பின்மை யின் தீவிரத்தை உணர்த்துகிறது. வகுப்புவாதத்தை விதைப்பதற்கு எதிராக எச்சரிக்கையான நிலைப் பாட்டை எடுக்கவும், மதச்சார்பற்ற ஒற்றுமையை வளர்த்து சகோதரத்துவம் பேணவும் தில்லியில் உள்ள மலையாளி சமூகம் முன்வர வேண்டும்.
வதந்தி மற்றும் வெறுப்பு பிரச்சாரம் நடந்து வரு கிறது. ஊடக ஊழியர்கள் கூட தாக்கப்படுகிறார்கள். இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெறுக்கத் தக்க பேச்சால் கலவர நெருப்பு மூட்டிய பாஜக தலைவர் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார் என்பது கவலைக் குரிய விஷயம். மதவெறியுடன் தனியார் படைகளும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன என்பது சட்டத்தின் ஆட்சி கடுமையாக சீரழிந்துள்ளதைக் குறிக்கிறது.
குற்றவாளிகள் மீது வலுவான நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயங்கக்கூடாது. வன் முறையைத் தடுக்க காவல்துறை திறம்படவும் சந்தே கத்துக்கு இடமளிக்காத வகையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். தேசத்தின் தலைநகரம் வகுப்புவாத பிரிவினைகளும் மனித வேட்டையும் நடக்கும் இடமாக மாறியுள்ளது என்பதைக் கேட்டு அதிர்ச்சியாக இருக்கி றது. இத்தகைய போக்குகளைத் தடுத்து மதச்சார்பின் மையை ஊக்குவிக்கும் பொறுப்பு ஆட்சியில் இருப்போ ருக்கு உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கம் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தைப் பாது காப்பதற்கானதாகும். அதை நேரடியாக வீதியில் தோற் கடிக்க முடியும் என சங்பரிவார் கொண்டுள்ள மாயை யின் விளைவே தில்லியில் நடக்கும் வன்முறைகள். அதை உணர்ந்து, மக்களிடையே அமைதிக்கான நடவ டிக்கைகளை முன்னெடுக்க மதச்சார்பற்ற சக்திகள் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.