tamilnadu

img

தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா

 தேனி, மே 6- திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேனி யில் உள்ள தனது வீட்டில் தனிமைப்ப டுத்தப்பட்டு உள்ளார். சென்னையில் வசித்து வந்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சொந்த ஊரான தேனிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். தேனி மாவட்ட எல்லையான தேவதானப் பட்டியில் அவர் நுழைந்த போது அவரை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அந்தச் சோதனையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி யானது. எனினும் கொரோனா தொற்றில் சிகப்பு நிற மண்டலமாகச் சென்னை அறி விக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஊர்  திரும்பியதால் இந்தச் சோதனை நடத்தப் பட்டது. இந்நிலையில், வெளியூரிலிருந்து வந்ததால் அவரை 14 நாள் அவரது வீட்டில்  தனிமைப்படுத்திக் கொள்ளச் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர். அதனை ஏற்று  அவர் தேனியில் உள்ள தனது வீட்டில் தனி மைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும்  அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் வீடு என்ற அறிவிப்புப் பலகையையும் சுகா தாரத் துறையினரால் ஒட்டப்பட்டுள்ளது.