சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 30 இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் சுமார் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது.
வேல்ஸ் கல்விக்குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீடு மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்கள் மற்றும் தெலுங்கானாவில் உள்ள 3 இடங்கள் என 30 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் அந்த நிறுவனம் சுமார் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது.
இவர், ரஜினி நடிப்பில் வெளிவந்த 2.o திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி. படத்தையும் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.