tamilnadu

இந்தியாவில் மளிகை கடைகளை திறக்கவிருக்கும் பிளிப்கார்ட்

மும்பை, மே 23-இந்தியாவில் மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை துவங்க பிளிப்கார்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான பிளிப்கார்ட்இந்தியாவில் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்தியாவில் உணவு பொருட்களின் சில்லறை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி உள்ள நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை துவங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் அமேசான் நிறுவனம்உணவு பொருட்களுக்கான சில்லறை கடைகளை இந்தியாவில் துவங்க உள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் பிளிப்கார்ட்டும் இதில் களமிறங்க உள்ளது. மேலும், சில்லறை கடைகளை நடத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனம்ஆன்லைன் விற்பனையில் ஈடுபட உள்ளதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.