tamilnadu

சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

புதுதில்லி,மே 19-காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஞாயிறன்று சந்தித்தார்.நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19 ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிலையில் பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணை க்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இந்தியா முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். புதுதில்லியில் காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின்பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, து.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு சென்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசினார். இந்நிலையில் லக்னோவில் இருந்து ஞாயிறன்று தில்லி திரும்பிய சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியைசந்தித்துள்ளார். காலையில் மீண்டும் ராகுல் காந்தி மற்றும் சரத் பவாரை சந்தித்து பேசினார் .