tamilnadu

img

இ -காமர்ஸ் நிறுவனங்களுக்கான தடை தொடரும்

சென்னை, ஏப்.19 - ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசியம் அல்லாத பொருள்களை வீடுகளுக்கு ஹோம்  டெலிவரி செய்யக் கூடாது என்று  ஆன்லைனில் வியாபாரம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்க ளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்த கடந்த 25 ஆம்  தேதி முதல் இந்த தடை அமலில் இருந்தாலும், சில நிறுவனங்கள் தங்களுக்கு விலக்கு இருப்ப தாக கூறி ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அத்தியாவசி யம் அல்லாத பொருள்களையும் ஹோம் டெலிவரி  செய்ய திட்டமிட்டுள்ள விவரம் அரசுக்கு தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, 20 ஆம் தேதிக்குப்  பிறகு அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட வழி முறைகளின் படி இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் இந்த  எச்சரிக்கையை விடுத்துள்ளது.