புதுதில்லி,நவ.8- அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் உத்தர ப்பிரதேச மாநிலத்தில் செய்யப் பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை சங்பரிவாரக்கும்பல் இடித்து தகர்த்தது. இங்குள்ள நிலத்தை 3 அமைப்புகள் சரிசம மாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16 ஆம் தேதி முடிந்து, தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உச்சசீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஓ.பி.சிங் ஆகியோர் உடன் சென்றனர்.