tamilnadu

img

காசிரங்கா தேசிய பூங்காவில் செயல்பட்டுவரும் சுரங்கங்களுக்கும் தடை

அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் செயல்பட்டுவரும் அனைத்து சுரங்கங்களுக்கும் தடைவிதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா ஒற்றை கொம்புடைய ஆசிய காண்டாமிருகங்களுக்கு உலக புகழ் பெற்றது. காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் கார்பி ஏங்லாங் மலைகளை இணைக்கும் பகுதியில் உள்ள யானைகள் வழித்தடத்தில் பெரிய அளவிலான இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக எழுந்ததையடுத்து மத்திய அதிகார குழு ஒன்று இதுகுறித்து ஆய்வு செய்தது.


இதுதொடர்பான அறிக்கையை மத்திய அதிகார குழு நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அளித்ததையடுத்து இந்த தடை உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் அசாம் மாநில காவல்துறை தலைவர் காசிரங்கா தேசிய பூங்காவின் கார்பி ஏங்லாங் மலைப்பகுதியில் உள்ள ஓடை மற்றும் ஆறுகள் உருவாகும் பகுதிகளில் எந்தவித சுரங்க தொழில் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், அப்பகுதியிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக எந்தவித இயற்கை வள சுரண்டல் மற்றும் இயற்கை பொருள்கள் கடத்தல் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.