tamilnadu

img

டிக்டாக் செயலிக்கான தடையை நீக்கி உயர்நீதிமன்றமதுரைக்கிளை உத்தரவு

டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடைகோரி முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை டிக்டாக்செயலிக்கு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து டிக்டாக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து டிக்டாக் செயலியை தடை செய்யும் விவகாரத்தில் மறு பரிசீலனை செய்து இன்றைக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது டிக்டாக்செயலியில் , சிறுவர்கள், பெண்கள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. 18 வயதுக்கு குறைவானவர்கள் வீடியோக்களை வெளியிட முடியாது என்று அந்நிறுவனம் உறுதியளித்தது. இதையடுத்து ஆபாச வீடியோக்கள் குறித்த சர்ச்சை எழுந்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் விதித்தனர். இதைத்தொடர்ந்து டிக்டாக் நிறுவனத்தின் உறுதிமொழியை தொடர்ந்து டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் டிக்டாக் குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.