சென்னை, செப்.4- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் வி.கே.தஹில் ராமாணீ. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். மத்திய தீர்ப்பாயம் தொடர்பான வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ளார். இந்த நிலையில், தலைமை நீதிபதி வி.கே.தஹில் ராமாணீயை மேகா லயா மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 3 நீதி பதிகள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளி யானது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ராமாணீயை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.