tamilnadu

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:குண்டர் சட்டம் ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

குண்டர் சட்டம் ரத்தை  எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை,ஜன.29- தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள்,இளம் பெண்கள்  உள்ளிட்ட ஏராளமானோரை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து, அதனை வீடியோ படம் எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்தது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. 

கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருநா வுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சபரி ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்த னர். பின்னர் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.  இந்நிலையில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன்  ஆகியோரின் தாயார்கள் தாக்கல் செய்த வழக்குகளின் அடிப்படையில் அவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டில்  உத்தரவிட்டது.  இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 29 புதனன்று மேல்முறையீடு செய்துள்ளது.