மதுரை, நவ.13 - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டி ற்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் முகிலன் மீது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் முகிலனுக்கு ஜாமமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து நீதிபதி, ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு சமூக போராட்டங்களில் பங்கெடுத்துள் ளார். மேலும் முகிலன் மீது கூறப் பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தாமதமாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சமூக ஆர்வலர் முகிலனுக்கு நிபந்த னை ஜாமீன் வழங்கி உத்தர விட்டார்.