நீதிமன்ற தீர்ப்பு மாறினாலும் ஏற்போம்
திருவனந்தபுரம், ஆக.30- சபரிமலை விசயத்தில் ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில்தான் மாநில அரசு இப்போதும் உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வெள்ளியன்று செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறியது. அதை அமலாக்க அரசு முன்வந்தது. உச்சநீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டால் அதற்கும் அரசு கீழ்படியும். இது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டதாகும். எல்லா காலத்திலும் நம்பிக்கை யாளர்களோடு நிற்கும் கட்சி சிபிஎம். கட்சி கூட்டங்களிலேயே அது மீண்டும் மீண்டும் கூறி தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. சபரிமலை விசயத்தை விளக்கும் வகையில் அப்போது நடந்த பேரணிகளில் நான் பேசியது என்ன என்பதை பார்த்தால் இது புரியும். சிலர் நம்பிக்கையாளர்களின் உரிமை யாளராக கூறிக்கொண்டு நிற்கிறார்கள் அல்லவா. நாங்கள் நம்பிக்கையா ளர்களுக்கு எதிரானவர்கள் என்று அவர்கள் தேர்தலின்போது பிரச்சாரம் மேற்கொள்ள முயன்றனர். அதை எதிர்கொள்வதில் போதிய எச்சரிக்கை இல்லாமல் போனது. சபரிமலையுடன் தொடர்புடைய விசயம் என்ன என்பது குறித்து தேர்தலின்போது நாங்கள் பேசவில்லை. அதையே சுயவிமர்சன மாக நாங்கள் கண்டறிந்தோம். சுய விமர்சனத்தை முன்வைத்தபோது நாங்கள் பெரிய தவறு செய்துவிட்ட தாகவும் தவறை ஒப்புக்கொண்டுள்ள தாகவும் சிலர் கூறினர். அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை.
சபரிமலை பிரச்சார காலம் கடந்துவிட்டது. சட்டம் கொண்டுவரு வோம், சட்ட பாதுகாப்பு அளிப்போம் என்றெல்லாம் கூறியவர்கள் உண்டல்லவா. மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் இப்போது பகிரங்கமாக சட்டத்தை இயற்ற முடியாது என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். இது அவர்களை நம்பியவர்களுக்கு செய்யும் வஞ்சகமல்லவா. நாட்டின் அர சியல் சட்டத்திற்கு உட்பட்டே அனை வராலும் செயல்பட முடியும். அரசியல் சட்டத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்புவோர் உள்ளபோதிலும் அரசியல் சட்டம் இப்போதும் நிலைநிற்கிறதுதானே. அப்படியென்றால் அதற்கு இணங்கியே நிலைபாடு மேற்கொள்ள முடியும். மகளிர் சுவரை உலகமே வியந்து பார்த்தது. பெண்களின் முன்னே ற்றத்தை அது பறைசாற்றியது. அதற்கு எதிராக பொறாமை கொண்டவர்கள் ஆரம்பத்தில் இருந்தே இருந்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு பெண்கள் சபரிமலை ஏறியபோது தவ றான பிரச்சாரம் நடத்தி வந்தவர் களுக்கு அது சாதகமானது. ஒரு பகுதி ஊடகங்களும் அதற்கு உதவின. மறுமலர்ச்சி என்பது நம்பிக்கைகளுக்கு எதிரானதல்ல. மூடநம்பிக்கைகளுக்கும் ஒழுக்க கேடுகளுக்கும் எதிரானதே மறுமலர்ச்சி என முதல்வர் கூறினார்.