சென்னை, ஏப்.2- வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமல் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் என்பது கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருப்பதால், நாம் மறைவாக இருப்பது விவேகமானது. வெளியில் நடமாடுவ தால் நமக்கு தெரியாமல் வேகமாக பரவுகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்கினாலும் வருங்காலம் கடினமாகவே இருக்கும். எனவே தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.