விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் இனாம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் ஸ்கிப்பிங் கில் ஒரு மணி நேரத்தில் 8747 முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அவரை வாலிபர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், செந்தமிழ் செல்வன், பிரசாந்த், நந்தன் கனகராஜ், பகிர்வு அறக்கட்டளை சரவணன், காளிராஜ் சந்தோஷ் ஜோதிபாசு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.