tamilnadu

இராஜபாளையம் பகுதியில் குட்டி கரடி நடமாட்டம் ....

இராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் வரை செல்லும் சாலையில் நவுத்துண்டு ஓடை என்று அழைக்கப்படும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள பாலத்தில், சுமார் ஆறு மாதமே ஆன குட்டி கரடி ஒன்று நடந்து சென்றது. மாலை 5மணி அளவில் விவசாயிகள் நடமாட்டம் இருக்கும்போது குட்டி கரடி நடந்து சென்றதை பார்த்தவுடன் மக்கள் பீதி அடைந்தனர். பின்னர், குட்டி கரடிகாட்டுக்குள் சென்று மறைந்தது. மேலும் அப்பகுதியில் தாய் கரடி உலவி வருவதையும் விவசாயிகள்பலர் பார்த்ததாகக் கூறப்படுகிறது. எனவே, வனத்துறையினர் இவ்வழியாக செல்வோர் எச்சரிக்கையாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.