இலங்கையில் பேருந்து நிலையத்தில் 87டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த 8 தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குண்டு வெடிப்பு நடத்த இடங்களில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக 9பாகிஸ்தானியர்கள்,9 இந்தியர்கள் உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை தவ்ejஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்து இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.